அத்தியாயம்-001

திருக்குர்ஆன்

அத்தியாயம்-001

Viski dawa

Quran - Chapter: 1

Al Fatiha - Origin in tamil

அத்தியாயம் : 1
அல் பாத்திஹா - தோற்றுவாய்
மொத்த வசனங்கள் : 7


★  அல் ஃபாத்திஹா என்ற அரபுச் சொல்லுக்கு தோற்றுவாய், முதன்மையானது எனப் பொருள்.


★ திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாக இது அமைந்துள்ளதால் இந்தப் பெயர் வந்தது. 


★ திருக்குர்ஆனிலேயே இந்த அத்தியாயம் குறித்துச் சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கிறது.
பார்க்க 15:87


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...


1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.


2. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.


3. தீர்ப்பு நாளின்1 அதிபதி.


4. (எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.


5. எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக!


6, 7. அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்
படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.26
                                                        

                                                                                                        Bismi Dawa

கருத்துரையிடுக

புதியது பழையவை