அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நபிகள் நாயகத்தை சீண்டிப் பார்த்து முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும் எச். ராஜா-வை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி வந்தவாசியில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...
இன்ஷா அல்லாஹ்...!
நாள் : 20-01-2018 சனிக்கிழமை
நேரம் : மாலை 03:30 மணி..
இடம் : வந்தவாசி, தேரடி அருகில், தபால் நிலையம் முன்பு.
கண்டன உரை : சகோதரர். (பெங்களூரு). முஹம்மத் கனி (TNTJ மாநில செயலாளர்).
இந்துச் சகோதரர்கள் புனிதராக நினைக்கும் ஆண்டாள் குறித்து சர்ச்சையான கருத்தை கவிஞர் வைரமுத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்துப் பேசியுள்ள பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் வம்புக்கிழுக்கும் வகையில் பேசியுள்ளார். எனவே மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படும் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், இனிமேல் இதுபோன்ற மதவெறிப் போக்கோடு பேசுவாரேயானால் முஸ்லிம் சமுதாயம் தக்க முறையில் எதிர்வினையாற்ற வேண்டி வரும் என்று எச்சரிக்கும் விதமாகவும்....
அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மச்சான்களாகவும் பழகும் இந்து முஸ்லிம்கள் மத்தியில் நச்சுக் கருத்தை விதைத்து கலவரத்தை உண்டாக்க சதி செய்யும் எச்.ராஜாவின் காவி கொட்டத்தை அடக்கும் வகையிலும்
நடை பெறும்
நடை பெறும்
ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பரிக்க...
குடும்பத்துடன் அழைக்கிறது...
குடும்பத்துடன் அழைக்கிறது...
*முஸ்லிம் சமுதாயமே!
கலவரத்தை தூண்டும் காவிகளுக்குப் பாடம் கற்பிக்க, களம் காண வா!
கலவரத்தை தூண்டும் காவிகளுக்குப் பாடம் கற்பிக்க, களம் காண வா!
மேலும், ஆர்ப்பாட்டத்திற்கு ஆகும் செலவுகளுக்காக உங்களுடைய பொருளாதாரத்தை அல்லாஹ்விற்காக உடனடியாக விரைந்து வாரி வழங்குங்கள்...
அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல் வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெரு மழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காக தன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெரு மழை விழா விட்டாலும் தூரல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
அல் குர்ஆன் - 2 : 265.
அல் குர்ஆன் - 2 : 265.
நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர்.
அல் குர்ஆன் - 33:06.
அல் குர்ஆன் - 33:06.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி).
அறிவிப்பவர் : அனஸ் (ரலி).
நூல் : புகாரி - 15.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார்". (அவை) :
1) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியவராவது.
2) ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.
3) நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி).
நூல் : புகாரி - 16.
நூல் : புகாரி - 16.
இப்படிக்கு,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ),வந்தவாசி
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ),வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம்.