வந்தவாசியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

நபிகள் நாயகத்தை வம்புக்கு இழுக்கும் வகையில் அவதூறாக பேசிய எச்.ராஜாவை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வந்தவாசியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் 
வந்தவாசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நபிகள் நாயகம் பற்றியும் அவர்தம் குடும்பத்தினரைபற்றியும் அவதூறாக எச் ராஜா பேசியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வந்தவாசி தேரடியில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் காதர்ஷரிப் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மயிலை அப்துல்ரஹீம் கண்டன உரையாற்றினார்.

நபிகள் நாயகம் குடும்பத்தினரை பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜாவை கண்டிக்கிறோம் கருத்துரிமை என்ற பெயரில் மனம்போன போக்கில் பேசும் காட்டுமிராண்டியைக் கைதுசெய்ய வேண்டும். மதவெறிபோக்கோடு நடந்துகொள்ளும் எச்.ராஜாவை குண்டர்சட்டத்தில் கைது செய்ய வேண்டும். காவிநிறநஞ்சைக்கலக்கும் ராஜாவை கைதுசெய்ய வேண்டும். 

சன்மார்க்கநெறியை அவமதித்து சங்கடங்களை ஏற்படுத்தும் ராஜாi வ கைது செய்ய வேண்டும்.

சமரசப்பாதையில் முள் வைக்கும் சண்டைபோக்கை தூண்டிவிடும் ராஜா தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். 

என்பன உள்ளிட்ட பல்வேறுமுழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் மாலிக்பாஷா, முகமது ரியாஸ், 100 முஸ்லிம் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட துணை செயலாளர் கரிமுல்லாஹ் நன்றி கூறினார்.


TNTJ vandavasi


கருத்துரையிடுக

புதியது பழையவை