இஸ்லாம் ஒரு பரிபூரணமான வாழ்க்கை நெறி..? எப்படி?
★ சார்லஸ் டார்வின்,கார்ல் மார்க்ஸ் போன்றவர்கள், மனிதனை பல்வேறு கோணத்தில் ஆய்வு செய்தார்கள்.
★ மனிதப்பண்பு குறித்ததான அவர்களது தேடலில், சிலர் மனிதனின் உடம்பைப் பற்றியும், வடிவம், உருவம் குறித்தும், கவனம் செலுத்தினர். உடலை மையமாக கொண்ட சில முடிவுகளுக்கு வந்தனர்.
★ சார்லஸ் டார்வின்,கார்ல் மார்க்ஸ் போன்றவர்கள், மனிதனை பல்வேறு கோணத்தில் ஆய்வு செய்தார்கள். மனிதனை குறித்த அவர்களது தேடலில்.,மனிதனின் வயிற்றின் மீது சில சிந்தனையாளர்களின் பார்வை பட்டன. மனிதனுக்கு மிக முக்கியமானது பசி தான்,அதற்கு தீர்வு வந்துவிட்டால், எந்த பிரச்சினையும் இருக்காது என நினைத்தனர். பசி தான் எல்லாப் பிரச்சனைக்கும் காரணமென நினைத்தனர்.மனித வாழக்கையை பாலியில் வழியாக அணுகியவர்கள், உடலுறவு தான் முக்கியம்; இதுவே மனித வாழ்வில் முக்கியமான அம்சம் என்ற முடிவுக்கு வந்தனர்.
ஆன்மீக வெளிப்பாடுகளை விட்டுவிட்டு, மனிதனை பற்றி புரிந்துக்கொள்ள முற்பட்டவர்கள், யானையை பற்றி, அதன் உடலை தடவி கருத்து சொன்ன குருடர்களை போன்றவர்கள். அவரவர் தனக்கு தென்பட்டதை வைத்து ஒரு முடிவுக்கு வந்தனர். அவர்கள் எடுத்த முடிவுகள், தவறானதும், பிழைமிக்கதும் ஆகும்.
மனிதனை பற்றி சரியாக புரியாதவன், மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதையும் புரிந்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு மனிதனும், தான் எப்படி வாழ வேண்டும் என்பதில் அடிப்படை விழிப்புணர்வு தேவை.இந்த விழிப்புணர்வு, ஆன்மீகத்தினால் தான் இயலும்.மதம் என்பது தான், மனிதனின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் சொல்லக்கூடியவை. அறிவியல் "எப்படி" என்பதை விளக்கும், ஆனால் "ஏன்" என்பதை விளக்காது. உதாரணமாக: பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது குறித்து அறிவியல் பேசும் ஆனால் ஏன் தோன்றியது என்பதை பற்றி அறிவியலால் பேச இயலாது.
உற்பத்தியாளருக்கு/ உருவாக்கியவருக்கு தான், தாம் உற்பத்தி செய்ததை / உருவாக்கியதை நன்றாக அறிவார். உதாரணத்திற்கு, உங்கள் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொள்வோம்.. பல்சர் (Pulsar) வாகனம் வைத்துள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்த குறிப்பிட்ட உற்பத்தியாளர், உங்கள் வாகனத்தில் குறிப்பிட்ட எரிபொருள் (அதாவது பெட்ரோல்) தான் போடவேண்டும், குறிப்பிட்ட மணி நேரங்கள் தான் தொடர்ச்சியாக ஓட்டவேண்டும், குறிப்பிட்ட கி.மீ ஓட்டிவிட்டால் சர்வீஸ் விடவேண்டும் , டையரில் குறிப்பிட்ட அளவே காற்றும் நிரப்பவேண்டும் என்று எக்கச்சக்க கண்டிஷன் போடுவார்கள் ..
நான் வாகனத்தை காசு கொடுத்து வாங்கிட்டேன், இனி என் பைக் இது, என் இஷ்டத்துக்கு நான் வைத்துக்கொள்கிறேன் என சொல்லி விட்டு, பல்சர் (Pulsar) பைக்கில் டீசலை நிரப்பி,தான் திருப்தியாகும் வரை டையரில் காற்று நிறப்பினால் அது சரியானாதா...??
இல்லை, நாம் அவ்வாறு செய்யமாட்டோம்; உற்பத்தியாளரை/ உண்டாக்கியவரை நாம் நம்புவோம், ஏனெனில் அவற்றை செய்த அவர்களுக்கே நன்றாக தெரியும் என்பதனால் தானே!! பைக் மட்டுமல்லாது பல சின்ன பொருட்களில் கூட உண்டாக்கியவரை நம்பி, அவரின் விதிமுறை பின்பற்றுகிறோம்; ஆனால் நம்மை உண்டாக்கியவரின் விதிமுறைகளை/வழிகாட்டுதல்களை பற்றி நாம் கவனம் செலுத்த தவறிவிட்டோம்..
மனிதனை, ஓர் இயந்திரம் என்று நாம் அழைத்தோமேயானால், உலகில் மிக சிக்கலான, மிகச்சிறந்த இயந்திரம் என்று தான் சொல்லவேண்டும். நம்முடைய படைப்பாளனாகிய இறைவனே, நமக்கு எது சரியானது, நம்முடைய வாழ்க்கை முறை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தனது இறைதூதர்கள்/ தீர்க்கத்தரிசிகள் மூலமாகவும், வேதங்களையும் அருளியும் நமக்கு போதிப்பான்.இறைவனின் வழிகாட்டுதலில் இருந்து விலகி செல்வது, குழப்பம் மற்றும் அழிவுக்கு வழிவகுக்கும்.
இஸ்லாம், நம்மை படைத்தவன் அருளிய மார்க்கம் என்பதால் இதுவே முழுமையான வாழ்க்கை நெறி. இஸ்லாம், பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றி பேசக்கூடியதாகும்.
நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (அல்குர்ஆன் : 3:19)
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான், (அல்குர்ஆன் : 2:208)
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல்குர்ஆன் : 3:85)