லைலத்துல் கத்ர் இரவு பற்றி அறிந்து கொள்ளுவோம்..!
★ லைலத்துல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும்!
★ லைத்துல் கத்ர் இரவு என்பது 1000 மாதங்களை விட சிறந்த இரவு ஆகும்! இந்த இரவில் அமல் செய்வது 1000 மாதங்கள் அமல் செய்வதை விட சிறந்தது ஆகும்!
★ கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்!
(அல்குர்ஆன் : 97 : 3)
★ ஆயிரம் மாதங்கள் என்றால் சுமார் 83 ஆண்டுகள் 4 மாதங்கள் ஆகும்!
★ நாம் அந்த ஓரு இரவில் செய்யும் அமல் செய்வது சுமார் 83 ஆண்டுகள் அல்லது அதை விட அதிகம் ஆண்டுகள் அமல் செய்த நன்மைகள் நமக்கு கிடைக்கும்!
★ அல்லாஹ் இந்த இரவின் சிறப்பை பற்றி கூற சூரத்துல் கத்ர் (97) என்று தனி சூராவே இறக்கி இதன் சிறப்பை பற்றி கூறி உள்ளான்! இதில் இருந்து நாம் இதனுடைய மகத்துவத்தை அறிந்து கொள்ள முடியும்!
★ லைத்துல் கத்ர் இரவு இன்னும் சிறந்து விளங்க மற்றொரு காரணம் அல்லாஹ் அல் குர்ஆனை முதன் முதலில் இந்த இரவில் தான் இறக்கி அருளினான்!
(அல்குர்ஆன் : 2 : 185)
★ லைத்துல் கத்ர் இரவு ரமலான் கடைசி ஒற்றைப்படை நாட்கள் ( 21, 23, 25, 27, 29 ) ஆகிய நாட்களில் ஏதோ ஒரு இரவில் அல்லாஹ் மறைத்து வைத்து உள்ளான்!
★ நபி (ஸல்) அவர்களுக்கு ஆரம்பத்தில் அல்லாஹ் இந்த இரவு எது என்று கூறி விட்டு பின்பு மறக்கடித்து விட்டான்!
(நூல் : புகாரி : 2016)
★ நாம் கடைசி ஒற்றைப்படை நாட்களில் உறுதியாக அமல் செய்தால் நாம் நிச்சயமாக இந்த கண்ணியம் மிக்க இரவை அடைந்து கொள்ள முடியும்!
★ லைத்துல் கத்ர் எந்த இரவில் உள்ளது :
★ நபி (ஸல்) அவர்களுக்கு ஆரம்பத்தில் அல்லாஹ் லைத்துல் கத்ர் எந்த இரவில் உள்ளது என்று அறிவித்து கொடுத்தான் இதை நபி (ஸல்) ஸஹாபாக்களுக்கு கூற வந்த பொழுது!
★ இரண்டு நபர்கள் சச்சரவு செய்து கொண்டு இருந்தார்கள் இதை பார்த்த நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் லைத்துல் கத்ர் இரவை பற்றி மறக்கடித்து விட்டான்!
★ இதுவும் உங்களுக்கு நன்மையாக தான் இருக்கும் அதான் அல்லாஹ் எனக்கு மறக்கடித்து விட்டான் என்று கூறினார்கள்!
(நூல் : புகாரி : 49)
★ காரணம் : இன்றும் நாம் பலரை பார்க்கலாம் ரமலான் மாதங்களில் கூட தொழுகை இல்லாமல் நோன்பு இல்லாமல் பலர் இருந்து கொண்டு உள்ளார்கள்!
★ நபி (ஸல்) அவர்கள் ஒரு வேலை இந்த இரவு தான் லைத்துல் கத்ர் இரவு என்று குறிப்பிட்டு கூறி இருந்தால் பெயர் அளவில் முஸ்லீம் என்று கூறி கொள்ள கூடியவர்கள் கூட அந்த ஒரு நாளில் மட்டும் நோன்பு வைத்து லைத்துல் கத்ர் இரவை அடைந்து கொள்ளுவார்கள்!
★ பின்பு தொடர்ச்சியாக நம்பிக்கையுடன் இந்த ரமலானில் அமல் செய்து வந்த முஹ்மின்களுக்கும்! பெயர் அளவில் முஸ்லீம் ஆக உள்ளவர்களுக்கும் என்ன வேறுபாடு உள்ளது???
★ உறுதியான நன்மைகளை எதிர்பார்த்து ரமலானில் அதிகம் அமல்கள் செய்ய கூடியவர்களால் மட்டும் தான் இன்ஷாஅல்லாஹ் அந்த இரவை அடைந்து கொள்ள முடியும்!
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
★ ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!
(நூல் : புகாரி : 2017)
★ ரமலானின் கடைசி ஒற்றைப்படை நாட்கள் ( 21, 23, 25, 27, 29 ) ஆகி நாட்களில் லைலத்துல் கத்ர் இரவை தேட சொல்லி உள்ளார்கள்!
★ நாம் நன்மையை எதிர் பார்த்து கடைசி ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ர் இரவை தேடினால் இன்ஷாஅல்லாஹ் நிச்சயமாக நாம் லைலத்துல் கத்ர் இரவை அடைந்து கொள்ள முடியும்!
லைலத்துல் கத்ர் 27 வது இரவா :
★ அல்லாஹ் பாதுகாக்கணும் நம்முடைய முஸ்லீம் சமூகத்தின் அறியாமை பலர் ரமலானின் கடைசி ஒரு இரவு 27 யில் மட்டும் லைலதுல் கத்ர் இரவு உள்ளது என எண்னி அன்று இரவை மட்டும் விஷேசமாக கொண்டாடி புது ஆடை அணிந்து அந்த இரவில் மட்டும் நின்று வணங்கி அமல் செய்து மற்ற நாட்களை விட்டு விடுகிறார்கள்!
★ நபி (ஸல்) அவர்களுக்கே தெளிவாக கடைசி ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ர் இரவு உள்ளது என்று கூறி உள்ளார்கள்!
★ லைலத்துல் கத்ர் இரவு இந்த இரவு தான் என்று நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது போது நாம் மட்டும் ஒரு குறிப்பிட்ட நாளை லைலத்துல் கத்ர் இரவு எண்னி அமல் செய்வது மடமையே!
★ ஒரு வேலை 27 வது இரவு லைலத்துல் கத்ர் ஆக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ் ஆனால் 27 வது இரவு லைலத்துல் கத்ர் இரவாக இல்லை என்றால் நம்மை விட பெரிய நஷ்டவாளி யாரும் இருக்க முடியாது!
★ இன்னும் சிலர் அல்லாஹ் பாதுகாக்கணும் : சூரத்துல் கத்ர் : 97 வது சூராவில் அல்லாஹ் மூன்று முறை லைலத்துல் கத்ரு என்று கூறி உள்ளான்!
★ இதில் லைலத்துல் கத்ரு என்ற வார்த்தை மொத்தம் 9 எழுத்து ஆகும் மூன்று முறை என்றால் 27 ஆகும் அதனால் 27 வது இரவு லைத்துல் கத்ரு இரவு இவர்களே ஒன்றை கணக்கு செய்து தீர்மானித்து கொண்டு உள்ளார்கள் அல்லாஹ் பாதுகாக்கணும்!
★ நபி (ஸல்) அவர்கள் சில நேரங்களில் 21 வது இரவு 23 வது இரவு அல்லது 25 வது இரவு அல்லது 27 வது இரவு அல்லது 29 வது இரவு தான் லைலத்துல் கத்ர் என்று என்று சில நேரங்களில் கூறி உள்ளார்கள்!
(நூல் : அபூதாவூத் : 1178 | அஹ்மத் : 15466 | புகாரி : 2021 & 2022)
★ இவ்வாறு சில நேரங்களில் சில குறிப்பிட்ட இரவை கூற காரணம் என்ன என்று இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் விளக்கம் கூறினார்கள்!
★ நபி (ஸல்) அவர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம் உள்ளவர்கள்! இந்த இரவில் நாங்கள் லைலத்துல் கத்ரைத் தேடலாமா? என்று கேட்கும்போது அந்த இரவில் தேடுங்கள். என்று பதிலளித்திருப்பார்கள் என்று கூறுகிறார்கள்!
(நூல் : திர்மிதீ : 722)
லைலத்துல் கத்ர் இரவின் ஆரம்பம் & முடிவு :
★ லைலத்துல் கத்ர் இரவு ஆரம்பம் மஹ்ரிப் நேரத்தில் இருந்து பஜ்ர் நேரம் பாங்கு கூறும் முன் வரை இருக்கும்!
★ சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்!
(அல்குர்ஆன் : 97 : 5)
லைலத்துல் கத்ர் இரவின் கூலி :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
★ நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ர் எனும் புனித இரவில் நின்று வணங்குகிறவரின் முந்தைய குற்றங்கள் மன்னிக்கப்படும்!
(நூல் : புகாரி : 35)
லைலத்துல் கத்ர் இரவில் செய்ய வேண்டிய அமல்கள் :
ஆயிஷா(ரலி)அறிவிக்கிறார்கள் :
★ (ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்! இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்! (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!
(நூல் : புகாரி : 2024)
★ நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு என்று குறிப்பிட்ட சிறப்பான அமல் எதுவும் செய்தது கிடையாது!
★ நபி (ஸல்) அவர்கள் இந்த இரவில் நின்று அதிகம் தொழுது உள்ளார்கள் பிறரையும் தொழ சொல்லி உள்ளார்கள் !
★ நாம் ஒற்றை படை இரவுகளில் நமது சக்திக்கு ஏற்றவாறு தொழ வேண்டும்! அல்குர்ஆன் ஓதுதல் தஸ்பீக் செய்தல்! அதிகம் துஆ செய்தால்! அதிகம் தவ்பா (பாவமன்னிப்பு) அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்! இது போன்ற அமல்களில் ஈடுப்பட வேண்டும்!
★ நபி (ஸல்) அவர்கள் ரமலான் இறுதியில் அதிகம் பேணி செய்த அமல் இஃதிகாஃப் ஆகும்! நாம் குறைந்தது ஒரு நாளாவது பள்ளியில் இஃதிகாஃப் இருக்க முயற்சி செய்ய வேண்டும்!
★ அல்லாஹ் பாதுகாக்கணும் சில ஊர்களில் அவர்களே புதியதாக லைலத்துல் கத்ர் இரவுக்கேன்று சிறப்பு தொழுகையை உருவாக்கி கொண்டு அதை தொழுகிறார்கள் ஆனால் இதற்கு எந்த கூலியும் கிடைக்காது!
★ இன்னும் சில ஊர்களில் தஸ்பீக் தொழுகை தொழுகிறார்கள் இது சம்பந்தமாக ஒரு ஸஹீஹான ஹதீஸ் கிடையாது இந்த தொழுகையும் நாம் தொழ கூடாது!
லைலத்துல் கத்ர் இரவில் ஓத வேண்டிய துஆ :
اَللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
'அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி ’
பொருள் :
அல்லாஹ்வே! நிச்சயமாக நீ மன்னிக்கக் கூடியவன். மேலும் மன்னிப்பை விரும்பக்கூடியவன் எனவே என்னை மன்னித்து விடுவாயாக!
(நூல் : திர்மிதி : 3580)
லைலத்துல் கத்ர் இரவின் சில அடையாளங்கள் :
1) லைலத்துல் கத்ர் இரவு குளிராகவோ, சூடாகவோ இருக்காது! மாறாக சாந்தமாகவும் அமைதியாகவும் காணப்படும்!
(நூல் : இப்னு குஸைமா : 2192)
2) மழை பொழியும்!
(நூல் : புகாரி : 2016)
3) அந்த இரவை அடுத்து வரும் காலை பொழுதில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மங்கிய நிலையில் காணப்படும்!
(நூல் : அஹ்மத் : 20249)
4) காலை சூரியன் உதிக்கும் போது வெப்பமே இல்லாமல்! (சந்திரனைப் போன்று) உதிக்கும்!
(நூல் : முஸ்லிம் : 2175)
5) லைத்துல் கத்ர் இரவில் காற்று இல்லாமல் நிதானமாகவும் இருக்கும்!
6) அந்த இரவில் சந்திரன் (மேக மூட்டம் இல்லாத காரணமாக) பிரகாசித்துக் கொண்டிருக்கும்!
7) அந்த இரவில் குளிரும் இருக்காது வெப்பமும் இருக்காது!
8) வானத்தில் ஏறி கற்கள் விழாது!
(நூல் : அஹ்மத் : 5 / 324)
லைலத்துல் கத்ர் இரவு பற்றி சில குறிப்புகள் :
1) இந்த இரவில் நபி (ஸல்) அவர்கள் அதிகம் அமல் செய்ய சொல்லி உள்ளார்கள் ஆனால் என்ன அமல் செய்ய வேண்டும் அதை எப்படி செய்ய வேண்டும் என்று கூறவில்லை!
இன்று பல ஊர்களில் விஷேஷ தொழுகை புதியதாக தொழுகையில் நிறைய சேர்த்து நபி அவர்கள் காட்டிதராத அமல்களை எல்லாம் செய்கிறார்கள்!
2) இந்த இரவை பற்றி வர கூடிய சூரா கத்ர் (97) இந்த சூராவிற்கு என்று எந்த சிறப்பும் நபி (ஸல்) அவர்கள் சொல்ல வில்லை ஆனால் இன்று பலர் இதற்கு நிறைய சிறப்புகள் கூறி இதை ஓதுகிறார்கள் இது ஒரு சூரா என்ற நோக்கில் ஓதலாம் ஆனால் இந்த சிறப்பு உள்ளது என்று ஓதினால் அது பிழையாகும்!
3) சில ஊர்களில் ஒற்றை படை நாட்களில் புது ஆடை அணிவது அல்லது 27 வது நாளில் புது ஆடை அணிவது விஷேச உணவு வீட்டை அழங்காரம் செய்வது போன்ற செயல்களை மார்க்கம் என்ற பெயரில் செய்கிறார்கள் ஆனால் இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!
@அல்லாஹ் போதுமானவன்