தீவிரவாதம் குறித்து இஸ்லாம்
இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்கிறதா?
எவர் படைப்பினங்களின் கருணை காட்டவில்லையோ அவன் மீது படைத்தவன் கருணை காட்ட மாட்டான். - முஹம்மது நபி ஸல். (ஸஹீஹ் புஹாரி 6013)
எவர் அநியாயமாக ஒருவரை கொலை செய்தால் அவர் உலகில் உள்ள எல்லா மக்களையும் கொலை செய்தவரை போலாவார் . - இறைமறை குர்ஆன் (5:32 )
மேற்கண்ட குரஆன் வசனம் மூலம் அறியமுடிவது என்னவென்றால், ஒரு கொலை செய்வதை , ஒட்டுமொத்த மக்களை கொன்றது போன்ற மிக பெரும் பாவமாக கண்டிக்கிறது. இன்னும் இந்த கட்டளைகளை மீறுபவர்களுக்கு (நாங்கள் நம்பும்) மறுமை நாளில் தண்டிக்கப்படுவார்கள் என்பதே இஸ்லாத்தின் போதனை.
இஸ்லாம் தீவிரவாதத்தை ஒரு போதும் ஆதரிப்பதில்லை. ஊக்குவிப்பதுமில்லை. மாறாக கடுமையாக கண்டிக்கிறது. கொலை செய்தவனுக்கு மிக கடுமையான தண்டனையே அளிக்க சொல்கிறது.