144 தடை உத்தரவு முஃமின்களுக்கு ஒரு ரஹ்மத்.

*ஹதீஸ்*

*144 தடை உத்தரவு முஃமின்களுக்கு ஒரு ரஹ்மத்.*
##################
١- [عن عائشة أم المؤمنين:] أنَّهَا سَأَلَتْ رَسولَ اللَّهِ ﷺ عَنِ الطَّاعُونِ، فأخْبَرَهَا نَبِيُّ اللَّهِ ﷺ: أنَّه كانَ عَذَابًا يَبْعَثُهُ اللَّهُ علَى مَن يَشَاءُ، فَجَعَلَهُ اللَّهُ رَحْمَةً لِلْمُؤْمِنِينَ، فليسَ مِن عَبْدٍ يَقَعُ الطَّاعُونُ، فَيَمْكُثُ في بَلَدِهِ صَابِرًا، يَعْلَمُ أنَّه لَنْ يُصِيبَهُ إلَّا ما كَتَبَ اللَّهُ له، إلَّا كانَ له مِثْلُ أجْرِ الشَّهِيدِ
البخاري (٢٥٦ هـ)، صحيح البخاري ٥٧٣٤  •  [صحيح]  •
ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடத்தில் *"காலரா"* நோயைப் பற்றி கேட்டார்கள்.

நபி(ஸல்) அவர்களிடம், " நிச்சயமாக அது(காலரா) வேதனையாக உள்ளது. அல்லாஹ் தான் நாடியவர்களின் மீது அதை அனுப்புகிறான்.
மேலும் அதை முஃமின்களுக்கு ரஹ்மத்தாக ஆக்குகிறான்.

எனவே ஓர் அடியான் காலரா நோய் ஏற்பட்ட ஓர் இடத்தில் இருந்து, தனக்கு அல்லாஹ் விதித்ததைத் தவிர எதுவும் தன்னை வந்தடையாது என்று அறிந்தவனாக தனது ஊரில் தங்கியிருந்தால் அவனுக்கு ஷஹீதுடைய கூலி போன்றது இருக்கிறது". என்று கூறினார்கள். நூல் -புஹாரி : 5734

அல்லாஹ் முஃமினின் அனைத்து விஷயத்தையும் துன்பத்திலும் சரி, இன்பத்திலும் சரி நல்லாதாகவே ஆக்கியுள்ளான்.

எனவே, இன்பத்திலே அவனுக்கு நன்றி செலுத்துவது நிஃமத்திற்காக நன்றி செலுத்தியதின் கூலியை அவனுக்கு அவசியமாக்கும்.

துன்பத்தில் பொறுமையாக இருப்பது துன்பத்திற்காக பொறுத்துக்கொண்டதின் கூலியை அவசியமாக்கும்.

ஆகவே, ஹதீஸில் வந்திருப்பதின்படி *"தாஊன்"* என்பது கொல்லக்கூடிய நோயாகும். இப்பொழுது இருக்கக் கூடிய *"கொரானா"* வைப் போல,

காஃபிர்களின் மீது நிகழ்ந்தால் அது *வேதனை.*

முஃமினின் மீது நிகழ்ந்தால் அது ரஹ்மத்

இந்த ஹதீஸின் அடிப்படையில் *144* தடை என்பது நமக்கு ரஹ்மத்துதான்.

பொறுமை மேற்கொள்ள வேண்டும், வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது.

இவ்வாறு இருந்தால், நாம் மரணமாகாவிட்டாலும் ஷஹீதுடை கூலி நமக்குக் கிடைக்கும். என்று இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) புகாரியின் விரிவுரை நூலான ஃபத்ஹுல் பாரியில் கூறியுள்ளார்கள்.

144 தடை உத்தரவை பொறுமையோடு எதிர்கொள்வோம்!

ஷஹீதின்  கூலியை பெறுவோம்!

கருத்துரையிடுக

புதியது பழையவை