கொரோனா பாதிப்புகளிலிருந்து தப்பித்த ஆப்ரிக்க ஏழை நாடுகள், காரணம் என்ன ?
*தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க, நபி(ஸல்) அவர்களின் அறிவுரைகளை நடைமுறைபடுத்த முன்வரும் உலக நாடுகள்*
ஐ.நாவின் உலக சுகாதார அமைப்பு (WHO), உலக நாடுகளில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளை வெளியிட்டு வருகின்றது.
ஆப்பிரிக்காவில் உள்ள ஏழை நாடுகளில் தான் கொரோனாவின் பாதிப்புகள் மிக மிக குறைவாக உள்ளது என அந்த அறிக்கையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன
*தெற்கு சூடான், எரிட்ரியா (Eritrea), லிபியா, உகாண்டா, மாலி, புருன்டி, மொஸாம்பிக், போட்ஸ்வானா போன்ற ஆப்ரிக்க நாடுகளில் ஒருவர் கூட கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை*
சோமாலியா, சூடான், எத்தியோப்பியா, டிஜிபோதி (Dijibouti), அங்கோலா, ஜாம்பியா , சாட் (Chad), நைஜர், காபூன், தான்சானியா, மடாகஸ்கர், லைபீரியா போன்ற 30-க்கும் மேற்பட்ட ஆப்ரிக்க ஏழை நாடுகளில் 1 முதல் 9 நபர்கள் மட்டுமே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்
ஆப்ரிக்க கண்டத்தில் மொத்தம் 52 நாடுகள் உள்ளன, இதில் ஐரோப்பாவை ஒட்டி உள்ள எகிப்து, மொரோகோ, அல்ஜீரியா போன்ற சில நாடுகளை தவிர்த்து 40-க்கும் மேற்பட்ட ஆப்ரிக்க நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மிக மிக குறைவு.
எகிப்து, மொரோகோ, அல்ஜீரியா ஆகிய நாடுகளை தவிர்த்து 49 ஆப்ரிக்க நாடுகளில் கொரோனாவினால் இதுவரை இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 மட்டுமே.
*வல்லரசு நாடுகளையும், வளர்ந்த நாடுகளையும், பொருளாதாரத்தில் முன்னனியில் உள்ள நாடுகளையும் அதிக அளவில் பாதித்த கொரோனா வைரஸ், ஆப்ரிக்க ஏழை நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை*
கொரோனா போன்ற தொற்று நோய்கள், பிராயாணிகள் (Travelers) மூலமே அதிகம் பரவுகின்றன. பொதுவாக ஏழை நாடுகளுக்கு யாரும் விருப்பபட்டு பிராயணம் (Travel) செய்வதில்லை. அவசியம் ஏற்பட்டால், வேறு வழி இல்லாமல் ஏழை நாடுகளுக்கு செல்வார்கள். எனவே கொரோனா நோய் பாதித்தவர்கள் பெரும்பாலும் ஏழை நாடுகளுக்கு செல்லாததால் அங்கு பெரிய அளவில் பாதிப்பில்லை. பிரயாணங்கள் குறைவாக உள்ள நாடுகளில் பாதிப்புகளும் குறைவாக உள்ளது,
*தமிழகத்தை எடுத்து கொண்டாலும், வெளியில் இருந்து வந்தவர்கள் தான் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார்கள்*, இதற்க்காக தான் தமிழக அரசு தனது எல்லைகளை தற்போது மூடியுள்ளது, வெளிமாநில போக்குவரத்தையும் தடை செய்துள்ளது.
இப்படிபட்ட தொற்று நோய்கள் பரவும் போது எல்லைகளை மூடி, வெளியில் இருந்து யாரும் மாநிலத்திற்க்குள் வரவிடாத வண்ணம் பார்த்து கொண்டால் நோய் பரவாமால் மக்களை காப்பாற்றலாம்.
மேலும் நோய் பாதிக்கப்பட்டவர்களை வெளியில் விடாமல் தனிமைபடுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலமும், நோய் பரவாமால் மக்களை காப்பாற்றலாம்.
*நபி(ஸல்) அவர்கள் இது போன்ற கொள்ளை நோய்கள் பரவும் போது , நாட்டின் எல்லைகளை மூடவும் (அதாவது வெளியூரில் இருந்து யாரையும் உள்ளே வர விடாமல் தடுத்து), உள்ளூர் மக்களையும் வெளியூருக்கு செல்லவிடாமல் தடுத்து (பயணங்களை தவிர்த்து), கொள்ளை நோய்களின் தீங்கில் இருந்து பாதுகாப்பு பெற அறிவுறை கூறியுள்ளார்கள்* (பார்க்க ஸஹீஹ் புஹாரி 5728)
கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து யாரையும் நாட்டிற்க்குள் வரவிடாமல் ஆரம்பத்திலேயே இத்தாலி தனது எல்லையை மூடிவிட்டு, பாதிக்கப்பட்ட ஒரு சிலரை தனிமைபடுத்தி இருந்தால் இன்றைக்கு இந்த அளவிற்க்கு இழப்புகள் ஏற்பட்டிருக்காது
*இத்தாலியை படிப்பினையாக கொண்டு பல நாடுகளும் நபி (ஸல்) அவர்கள் சொன்ன வழியில், தங்களின் நாட்டு எல்லைகளை மூடியுள்ளனர்*. யாரையும் நாட்டிற்க்குள் அனுமதிப்ப தில்லை. உள்நாட்டு மக்களையும் வேறு நாட்டிற்க்கு போக அனுமதிப்பதில்லை. பெறும்பாலும் போக்குவரதை தடை செய்துள்ளனர்.
*Entry/Exit பிராயாணங்களை தடுப்பதன் மூலம் தான் தொற்று நோய் பரவலை கட்டுபடுத்த முடியும் என நபி(ஸல்) அவர்களின் அறிவுறைக்கு ஏற்ப* உலகில் பல நாடுகள் பிராயாண கட்டுபாடுகளை வித்தித்து தனது நாட்டு மக்களை காத்து வருகின்றது
மக்களை தனிமைபடுத்துவதின் மூலம் பொருளாதார ரீதியாக பலர் பாதிக்கபடுவார்கள், அரசு தான் அவர்களுக்கு நிவாரணம் அளித்து அவர்களின் துன்பத்தை போக்க வேண்டும்
*ஆக்கம் : S.சித்தீக் M.Tech*
ஐ.நாவின் உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கை மற்றும் Live Report
https://www.who.int/docs/default-source/coronaviruse/situation-reports/20200321-sitrep-61-covid-19.pdf
https://experience.arcgis.com/experience/685d0ace521648f8a5beeeee1b9125cd
Tags:
News